ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேர் சிறைபிடிப்பு எல்லை தாண்டியதாக கூறி இலங்கை கடற்படை நடவடிக்கை

கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படை சிறைபிடித்திருப்பது மீனவ கிராமங்களில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று காலை 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 2500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குள் மீண்டபிடிக்க சென்றிருந்தனர். கச்சத்தீவு அருகே அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அங்கு ரோந்து சென்ற இலங்கை கடற்படையினர் படகுடன் அவர்களை சுற்றி வளைத்தனர்.

8 மீனவர்களை சிறைபிடித்த இலங்கை கடற்படையினர், விசைப்படகுகளையும் பறிமுதல் செய்தனர். இதனால் பாதிக்கப்பட்ட மற்ற மீனவர்கள் அனைவரும் மீன்பிடிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் கரை திரும்பியுள்ளனர். சிறை பிடிக்கப்பட்ட மீனவர்களை உடனடியாக மீட்க இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராமேஸ்வரம் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Chockalingam

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *