முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் 69வது பிறந்த நாளையொட்டி பிரதமர் மோடி, நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து

எங்கள் பாசமிகு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் 69வது பிறந்த நாளையொட்டி பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து பணியாற்ற வேண்டும் என கூறினார். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு மாண்புமிகு இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் தொலைபேசி வாயிலாகப் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களைத் தொலைபேசியில் தொடர்புகொண்ட, மாண்புமிகு இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் தமது பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்து, ‘தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக நீங்கள் தொடர்ந்து பணியாற்ற வேண்டும்’ என்று தமது விருப்பத்தைத் தெரிவித்தார். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், ‘தங்களின் ஒத்துழைப்புடன் நான் தொடர்ந்து தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக உழைப்பேன்’ என உறுதியளித்தார்.

ரஜினிகாந்த் வாழ்த்து

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். இன்று பிறந்த நாள் காணும் இனிய நண்பர் மதிப்பிற்குரிய தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள் என கூறினார்.

Chockalingam